தீவிரவாதிகள் ஊடுருவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை தகவல்

பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் குறிப்பாக கோவையில் ஊடுருவியிருப்பதாக காவல்துறையினர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறியதாவது: பயங்கரவாதிகள் கோயம்புத்தூர் நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகவலை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவான எச்சரிக்கைதான். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநக போலீசார் தரப்பில் இருந்து எவ்வித புகைப்படங்களும் வெளியிடவில்லை. எங்கிருந்து தகவல் வந்தது என்று வெளியிடமுடியாது’ என்று கூறியுள்ளார்

Leave a Reply