தீர்ப்பு எப்படி வந்தாலும் பாக்யராஜ் தான் நடிகர் சங்க தலைவர்! ஐசரி கணேஷ்

தீர்ப்பு எப்படி வந்தாலும் பாக்யராஜ் தான் நடிகர் சங்க தலைவர்! ஐசரி கணேஷ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக இன்னும் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் சங்கத்தலைவராக பாக்கியராஜ் தான் தேர்வு செய்யப்படுவார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் அம்மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சங்கத்தினருக்கு சங்கரதாஸ் சுவாமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், திரையரங்குகளில் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யும் அரசின் திட்டத்தை வரவேற்பதாக கூறினார்.

மேலும் டிக்கெட் புக் செய்வதற்கான ஆப் வசதியை தமிழக அரசே அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், இவ்வாறு செய்தால் நடிகர்களின் மார்க்கெட் நிலவரங்கள் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்றும் ஐசரி கணேஷ் தெரிவித்தார். இதன் மூலம் நடிகர்களின் சம்பளம் குறையவும் வாய்ப்புள்ளதாகவும் ஐசரி கணேஷ் கூறினார்

 

Leave a Reply