தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இன்னொரு பிரபல நடிகரின் படம் ரிலீஸ்?

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவிருக்கும் நிலையில், அதே தீபாவளி தினத்தில் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படத்தை வெளியிட அந்த படத்தின் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் தான் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ‘ஆக்சன்’ திரைப்படம் ஆகும்

சுந்தர் சி, தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, உள்பட பலர் நடித்துள்ள ‘ஆக்சன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படமும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கைதி, ஆக்சன் படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே உறுதி செய்ய முடியும்

மேலும் தனுஷின் ‘பட்டாஸ்’, உள்பட ஒருசில திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸை திட்டமிட்டுள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply