தீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்?

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24ந் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 27ஆம் ஞாயிறு அன்று தீபாவளி வரவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை வேலைநாள் என்பதால் அக்டோபர் 24ந்தேதி வியாழக்கிழமையே பிகில் திரைப்படம் வெளியாகும் என்றும் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply