தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

மதுரை:

மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளுக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது.

மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நேர்காணலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.

அவர் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக பேசினார். முன்னதாக நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.

தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்பட திரளான தி.மு.க.வினர் வரவேற்றனர்.

https://www.maalaimalar.com/news/state/dmk-interview-of-minister-udhayanidhi-stalin-with-youth-executives-569364