ஆனால் திரைப்படம் திரையிடக்கூடாது!

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் பார்வையாளர்கள் இல்லாமல் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவர்களை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் பூட்டியே என்பதால் தற்போது திரையரங்குகளில் தூய்மைப்படுத்தவும் புனரமைக்கவும் இந்த அனுமதி வசதியாக இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

திரையரங்குகளில் திறக்க அனுமதி அளித்தவுடன் திரையரங்கில் திரைப்படங்கள் திரையிட தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply