திரையரங்குகளுக்கு செக் வைத்த விஷால்!

திரையரங்குகளுக்கு செக் வைத்த விஷால்!

திரையுலகினர்களுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் கூடுதல் சுமையாக இருப்பதால் இந்த சுமைகள் அனைத்தும் டிக்கெட் கட்டணத்தில் சுமத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் பார்க்கிங், ஸ்னாக்ஸ் விலை ஆகியவைகளுக்காகவும் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திடீர் கட்டுப்பாடு வைத்துள்ளார். அவர் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

1. நாளை முதல் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே திரையரங்குகளில் வசூலிக்க வேண்டும்
2.கேண்டீனில் எம்.ஆர்.பி விலைக்குத்தான் விற்க வேண்டும்
3. ரூ.10 அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்
4. தண்ணீர் பாட்டில் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்
5. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது

மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் புகார் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கும் விஷால் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கும் கட்டுப்பாடு வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply