‘திரெளபதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: தயாராகும் எதிர்ப்பாளர்கள்

கடந்த ஜனவரி 3-ம் தேதி ‘திரெளபதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இணையத்தில் இந்த படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

‘திரெளபதி’ படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக இந்த படத்தின் இயக்குனர் ஜி.,மோகன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் திரெளபதி’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி’ படத்தை மோகன்.ஜி தயாரித்து இயக்கியுள்ளார் . மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

Leave a Reply