திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து

ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருந்த திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்தது. இது உள்நோக்கம் கொண்டது என்றும், கஜா புயல் நிவாரண பணிகள் இந்த இடைத்தேர்தலால் பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் கருத்து கூறி வந்தன.

இந்த நிலையில் சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

Leave a Reply