திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா?

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றே கூறப்படுகிறது. எனவே கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதில் அவரது மகன் போட்டியிடுகின்றாரா? அல்லது பேரன் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply