பெரும் பரபரப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது

மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக ஆட்சியர் அலுவலகம் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும், நாளை வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 6,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 127 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply