shadow

திருவண்ணாமலை தேர் வெள்ளோட்டம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபம் கார்த்திகை திருவிழா வரும் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது

இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது

இதனை அடுத்து இந்த தேர் வெள்ளோட்டம் நாளை நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது