திருமாவளவன் வெற்றி பெற வாழ்த்து கூறிய ரஜினி பட இயக்குனர்!

திமுக கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளை பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திலும் போட்டியிடவுள்ளது.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் ஆதரவு கொடுத்துள்ளார்.

இன்று நேரில் திருமாவளவனை சந்தித்த ரஞ்சித், அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருமாவளவன் தொகுதியில் இயக்குனர் ரஞ்சித் பிரச்சாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply