திருமழிசை தற்காலிக சந்தை 2 நாட்கள் மூடப்படும்:

அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த முழு ஊரடங்கு காரணமாக ஜூன் 21, 28 தேதிகளில் திருமழிசை தற்காலிக சந்தை செயல்படாது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

எனவே காய்கறி தேவைப்படுவோர் அதற்கு முந்தைய நாளே வாங்கி வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply