shadow

திருமணம் செய்து குழந்தை பெற ஆசை: பிக்பாஸ் மும்தாஜ்

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான மும்தாஜ், விஜியின் மகனைப் பார்த்த உடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று தன் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

மேலும் விஜியின் குழந்தை நிலன் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து வந்ததை பார்த்த தனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசையாக இருந்ததாகவும் கூறினார். ஆனால் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.

19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் மும்தாஜுக்கு தற்போது 38 வயதாகிறது என்பதும் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *