திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்குதல்: தாய், மகள் படுகாயம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஒன்றாகிய இரண்டாவது மலைப் பாதையில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் தாய் மற்றும் மகள் படுகாயம் அடைந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருமலை பாலாஜி நகரைச் சேர்ந்த வம்சி என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இரண்டாவது மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை வம்சியின் மனைவி மற்றும் மகள் மீது திடீரென பாய்ந்து தாக்கியது.

இதில் காயம் அடைந்த 2 பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இரண்டாவது மலை பாதையில் வாகன ஓட்டிகள் தனியாக செல்ல வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply