திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இருபதாம் தேதி வரை பவித்ரோற்சவம்

இந்த 3 நாட்களும் திருமலையில் ஏழுமலையானுக்கு நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஆண்டுதோறும் தோ‌ஷம் களையும் முக்கியமான உற்சவமான பவித்ரோற்சவத்தை ஆடி மாதம் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.

இதையொட்டி 18-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 19-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 20-ந்தேதி மகா பூர்ணாஹுதியுடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவுபெற உள்ளது.

இந்நாட்களில் கோவிலில் உள்ள மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையானை எழுந்தருள செய்து அங்கு 3 நாட்கள் யாகம் வளர்த்து இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஆர்ஜித சேவைகள் 3 நாட்களும் ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக பவித்திர உற்சவம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

திருப்பதி கோசாலையில் வருகிற 30-ந்தேதி கொரோனா நிபந்தனைகளுடன் கோ பூஜை நடக்கிறது. இந்த நாளில் பக்தர்கள் பசுகளுக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா நிபந்தனைகளுடன் கோபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.