திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

நேற்று திருப்பதி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் வராக சுவாமி கோவிலிலும் அதன்பின்னர் ஏழுமலையான் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே நடைபெற்ற சகஸ்கர தீப அலங்கார சேவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

Leave a Reply