திருப்பதி ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது: தமிழக முதல்வர்

#கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுவதும் தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வந்த நிலையில் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை 100 அடியை எட்டிவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது! இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்

காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப்பணித்துறை சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். மேலும் கோதாவரி – காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Reply