திருந்தவே திருந்தாதா தேமுதிக? சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு

திருந்தவே திருந்தாதா தேமுதிக? சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு

கடந்த மக்களவை தேர்தலின்போது தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தையை எல்.கே.சுதீஷ் நடத்தியது பெரும் சொதப்பலாக இருந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த எல்.கே.சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி இன்று நடத்தப்பட்ட ஆலோசனை பிறகு, கூட்டணிக் கட்சியுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் ஐந்து பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் அதிமுக, திமுகவுடன் கடந்த மக்களவை தேர்தலின்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதால் பெரும் கெட்ட பெயர் எல்.கே.சுதீஷால்தான் ஏற்பட்டது என்று தேமுதிக தொண்டர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் தற்போது மீண்டும் அவரது தலைமையில்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளது

Leave a Reply