திருநங்கை வேட்புமனு நிராகரிப்பு: உயர்நிதிமன்றத்தில் வழக்கு

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திருநங்கை பாரதிகண்ணம்மா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பாரதிகண்ணம்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Leave a Reply