திருடர்களை வீரமாக தாக்கிய முதிய தம்பதிக்கு தமிழக முதல்வர் விருது!

சமீபத்தில் நெல்லையில் ஒரு முதிய தம்பதியினர் இரண்டு திருடர்களை வீரமாக அடித்து விரட்டிய காட்சியின் சிசிடிவி வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அமிதாப்பச்சன், ஹர்பஜன்சிங் உட்பட பலர் இந்த வீடியோவை பார்த்து வீரமான முதிய தம்பதிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்

இந்த நிலையில் நாளை சென்னையில் சுதந்திர தின விழாவில் இந்த வீரமான தம்பதிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கொள்ளையர்களை வீரமாக விரட்டி அடித்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதிக்கு வீரதீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

 

Leave a Reply