திருச்சி – மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள்

திருச்சி – மலேசிய விமானம்: நூலிழையில் உயிர் தப்பிய 120 பயணிகள்

நேற்று திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு ஒரு விமானம் செல்ல தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 120 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்

இந்த நிலையில் விமானம் கிளம்புவதற்கு முன் சோதனை செய்த நிலையில் கடைசி நேரத்தில் விமானத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்யவிருந்த 120 பயணிகள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்

கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பயணிகள் அனைவரும் மூச்சு விட முடியாமல் சிரமத்தில் இருந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply