shadow

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்பி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி மாறும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி.யான மவுசம் பெனாசிர் நூர் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சட்டம் பயின்ற பட்டதாரியான மவுசம், மேற்கு வங்காளம் மாநிலத்துக்குட்பட்ட சுஜாப்பூர் சட்டசபை தொகுதி பெண் உறுப்பினராக மூன்று முறை வெற்றிபெற்ற ருபி நூர் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மல்தாஹா உட்டார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை போட்டியிட்டு மவுசம் பெனாசிர் நூர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply