திராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம்: பாஜக பிரமுகர்

திராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம்: பாஜக பிரமுகர்

திராவிட நிலத்தில் ஊழல், லஞ்சம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை திமுக கூட்டணி வெற்றி காட்டுவதாகவும், விரைவில் திராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம் என்றும் பாஜக பிரமுகர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது குறித்து கருத்து தெரிவித்த தூத்துகுடி எம்பி கனிமொழி, ‘தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக வெற்றி பெறாதது, திராவிடம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது என்று கூறினார். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த நாராயணன் கூறியதாவது:

தவறு. திராவிட நிலத்தில் ஊழல்,லஞ்சம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை காட்டுகிறது. விரைவில் திராவிட நிலத்தில் இருந்து ஊழல்வாதிகளை ஒழிப்போம்.

Leave a Reply