திமுக முன்னாள் எம்பி ராமநாதன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர் என்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் கோவை ராமநாதன் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை அடுத்து திமுகவின் முக்கிய தலைவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திமுக முன்னாள் எம்.பி.யும்., எம்.எல்.ஏ.வுமான கோவை மு.ராமநாதன் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடவும் திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது

 

Leave a Reply