திமுக கூட்டணியில் மதிமுக: நால்வர் குழுவை நியமித்த வைகோ!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதால் தற்போது மதிமுகவுடன் கூட்டணி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது

திமுக உடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 4 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்துள்ளார். மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா, ஆவடி அந்திரிதாஸ் ஆகிய நால்வர் கொண்ட குழு, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள் என்று வைகோ அறிவித்துள்ளார்

Leave a Reply