திமுக கூட்டணியில் இப்போதைக்கு யாரும் இல்லை: துரைமுருகன் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இப்போதைக்கு யாரும் இல்லை: துரைமுருகன் அறிவிப்பு

திமுகவுடன் இப்போதைக்கு எந்த கட்சியும் கூட்டணியில் இல்லை என்றும், தேர்தலின்போது ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும், அதுவரை அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகளே என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம் என்று வலிய கூறி வந்த மதிமுக, விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இதுகுறித்து துரைமுருகன் மேலும் கூறியபோது, ‘தேர்தல் தேதி அறிவித்த பின்னர் திமுகவுடன் கூட்டணி சேரவுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசி, தொகுதி உடன்பாடு வந்த பின்னரே கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றது என்பதை சொல்ல முடியும் என்றும், இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் திமுகவுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

துரைமுருகனின் இந்த கருத்து வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தாலும், துரைமுருகன் கூறியதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம் என்றும் கூறி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.