பெரும் சோகத்தில் திமுகவினர்.
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் அவர்கள் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 62
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவை அடுத்து கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத்தில் சிறிய பிரச்சனையும், கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது. இந்த நிலையில் இன்று காலை ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த சிறிது நேரத்தில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது
ஜூன் 10ஆம் இன்று அவருடைய பிறந்த நாளை அடுத்து திமுக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் அவர் காலமான செய்தி பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.