திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை: திடீரென பின்வாங்கிய திருமாவளவன்

டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை என்றும், காஷ்மீர் பிரச்சனையை வலியுறுத்தி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனைக்காக இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சிதம்பரம் கைது காரணமாக ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆர்ப்பாட்டத்தை மறந்துவிட்ட நிலையில் திருமாவளவன் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்து திடீரென பின்வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply