திமுக ஆட்சி அமைக்க ஆதரவா? தங்கதமிழ்செல்வன் விளக்கம்
22 தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் தேவைப்பட்டால் திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு அளிக்கும் என்ற வதந்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் திமுக ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும், அதே நேரத்தில் அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்கள் முதல் பணி என்றும் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
22 இடைத்தேர்தல் முடிவுக்கு பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் இருக்கும் என்று கருதப்படும் நிலையில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது