திமுகவுக்கு பதிலாக விஜய்க்கு வேலை செய்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

திமுகவுக்கு பதிலாக விஜய்க்கு வேலை செய்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுக்காக பிரசாந்த் கிஷோர் பணிபுரிய உள்ளார் என்பதும் அது குறித்த பணிகளை பிரசாந்த் கிஷோர் நிறுவனம் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அதிரடியாக ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை வெற்றி பெற வைத்து ஆந்திராவை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் விஜய் மூலம் காப்பாற்ற பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக மதுரை விஜய் ரசிகர்கள் கற்பனை வளத்துடன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்

இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையாகவே திமுகவுக்கு பதிலாக விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றினால் நிச்சயம் விஜய் ஆரம்பிக்கும் அரசியல் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட்டுகள் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.