திமுகவுக்கு அமித்ஷா பயந்துவிட்டார்: உதயநிதி ஸ்டாலின்

திமுகவுக்கு அமித்ஷா பயந்துவிட்டார்: உதயநிதி ஸ்டாலின்

திமுக அறிவித்த போராட்டத்திற்கு பயந்து அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெற்றது திமுகவிற்கும், திராவிடத்திற்கும் கிடைத்த வெற்றி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே மொழி என இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதற்கு திமுக உள்பட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்தது.

இதனையடுத்து திமுக தலைவரை கவர்னர் அழைத்து பேசியவுடன், இந்தி மொழி குறித்து அமித்ஷா ஒரு விளக்கத்தையும் அளித்தார்.

இதுகுறித்து கருத்து கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுக அறிவித்த போராட்டத்திற்கு பயந்து அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெற்றது திமுகவிற்கும், திராவிடத்திற்கும் கிடைத்த வெற்றி என இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

Leave a Reply