திமுகவில் விபி கலைராஜன்: அதிர்ச்சியில் தினகரன்

திமுகவில் விபி கலைராஜன்: அதிர்ச்சியில் தினகரன்

தேர்தல் நெருங்க நெருங்க தினகரனின் அமமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவுக்கும் திமுகவிற்கு மாறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முன்னதாக அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றதால் அமமுகவின் பலவீனமானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விபி கலைராஜனும் அக்கட்சியில் இருந்து விலகுவது தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply