திமுகவின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது: முக ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடையும் நிலையில் அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின், ‘எடப்பாடி பழனிச்சாமி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ள அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 2037 கோடி ரூபாயை ஒரு சல்லிக்காசு கூட செலவு செய்யாமல் எடப்பாடி அரசு திருப்பி அனுப்பி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்

மக்களுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய முக ஸ்டாலின் வேலூர் தொகுதி மக்கள் மத்திய மாநில அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Leave a Reply