திமுகவின் வாயை புத்திசாலித்தனமாக அடக்கிய மத்திய அரசு!

திமுகவின் வாயை புத்திசாலித்தனமாக அடக்கிய மத்திய அரசு!

தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தி மொழியை இந்தி பேசாத மாநிலங்களில் பயிற்றுவிக்க, புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாகவும் இதனை எதிர்த்து போராட்டம் செய்யப்போவதாகவும், இதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் திமுக அறிவித்தது

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு மும்மொழி கொள்கையில் மாற்றம் இல்லை என்றும் மூன்றாவது மொழியாக மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்வு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் தமிழத்தில் உள்ள மாணவர்கள், தாய்மொழி தமிழ், ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தியை தவிர வேறு மொழியை தேர்வு செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே புதிய உத்தரவு மூலம் திமுகவின் வாயை புத்திசாலித்தனமாக அடைத்த மத்திய அரசு, தனது காரியத்தையும் கச்சிதமாக சாதித்து கொண்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.