திமுகவின் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா? கே.எஸ்.அழகிரி தகவல்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக எம்.பி-க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் டெல்லியில் திமுக நடத்தும் காஷ்மீர் பிரச்சனைக்கான ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி செய்துள்ளார். முன்னதாக காஷ்மீர் மசோதாவிற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply