தினமும் 1.5ஜிபி டேட்டா: ஏர்டெல் அதிரடி

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் வலைத்தளத்தின்படி புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா 224 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல், டேட்டா, சிம், பிரீபெயிட்

Leave a Reply