தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி-மோடி: அரசியல் திருப்பம் ஏற்படுமா?

தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி-மோடி: அரசியல் திருப்பம் ஏற்படுமா?

தினந்தந்தி பவளவிழாவில் பங்கேற்க பாரத பிரதமர் நரேந்திரமோடி சற்றுமுன்னர் சென்னை வந்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் இந்த விழா சற்று முன்னர் தொடங்கியது.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாாிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், நல்லக்கண்ணு, வாசன், சரத்குமார், பிரபு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்

இந்த நிலையில் இதே விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் மற்றும் மருமகனுடன் கலந்து கொள்கிறார். மோடி, ரஜினி இருவரும் கலந்து கொள்ளும் விழா என்ற வகையில் இன்றையவிழா முடிந்தவுடன் ரஜினி-மோடி சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவை முடிவடைந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply