தினகரன் கட்சியில் இருந்த கடைசி ஆளும் எஸ்கேப்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமா?

தினகரன் கட்சியில் இருந்த கடைசி ஆளும் எஸ்கேப்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமா?

அதிமுகவுக்கு இணையாக தினகரனின் அமமுக கட்சி இருக்கும் என்று தினகரன் கட்சியை பலர் நம்பிய நிலையில் பல முன்னணி தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக, திமுக கட்சிகளில் சேர்ந்து கொண்டிருப்பதால் அமமுக சிக்கலில் உள்ளது

குறிப்பாக செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன் போன்ற முன்னணி தலைவர்கள் கட்சி மாறியது அமமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த புகழேந்தியும் அதிமுகவில் இணைய உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அமமுக அமைப்புச் செயலாளர் ராஜமாணிக்கம் என்பவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். அமமுகவில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சிவா ராஜமாணிக்கம் என்பவர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அவரும் அதிமுகவில் இணைந்து விட்டதால் அமமுகவில் கூடாரம் கிட்டத்தட்ட காலி ஆகிவிட்டது என்பதாகவே கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய தொகுதிகளில் போட்டியிட அமமுகவில் தற்போது பிரபல வேட்பாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் வரை கூட அந்த கட்சி தாக்குப்பிடிக்குமா? என்பதுதான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவி வரும் ஒரு கருத்தாக உள்ளது

Leave a Reply