தினகரனும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவார்: நமது அம்மா நாளேடு

தினகரனும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவார்: நமது அம்மா நாளேடு

தினகரனின் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து திமுக, அதிமுக என போய்க்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் தினகரனும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது.

வெள்ளந்தந்தி தொண்டர்களை கொண்ட அதிமுகவை விட்டு அதன் நேர் எதிர் இயக்கமான திமுகவிற்கு தங்க தமிழ்செல்வன் போயிருப்பது காலத்தால் மன்னிக்க முடியாத பாவ காரியம் என குறிப்பிட்டுள்ள நமது அம்மா, தங்கதமிழ்செல்வனின் அரசியல் அஸ்தமனமாக தொடங்கிவிட்டது என்றும் கூறியுள்ளது

மேலும் தினகரன் என்றாலே தினமும் உதிக்கிற சூரியன் என்று அர்த்தம் என்றும், அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக திமுகவிற்கு அனுப்பிவிட்டு கடைசியில் அவரும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவார் என்றும் நமது அம்மாவில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply