தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி? தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி!

தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி? தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி!

பேசவே தெரியாத தினகரனுக்கு ஏன் எம்எல்ஏ பதவி என திமுகவில் சமீபத்தில் இணைந்த தங்கத்தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசவே தெரியாத தினகரனுக்கு எதற்கு எம்எல்ஏ பதவி என்றும், அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற புகழேந்தியின் கருத்து சரியானது என்றும் தங்கத்தமிழ் பாண்டியன் தெரிவித்துள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினகரனின் அமமுக கட்சியில் இருந்த தங்கத்தமிழ்செல்வன் திடீரென திமுகவிற்கு தாவினார் என்பது தெரிந்ததே

தற்போது திமுகவில் இருக்கும் தங்கத்தமிழ்செல்வன் அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் தற்போது அவர் வகித்து வரும் எம்எல்ஏ பதவி எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து நேற்று வரை அமமுகவில் இருந்த தங்கத்தமிழ்செல்வன் தினகரனுக்கு பேசவே தெரியாது என்பது தெரியாதா? தற்போது திமுகவிற்கு வந்த பிறகு இவ்வாறு கூறுவது சரியா? என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

Leave a Reply