திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு

திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு

தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால் வரும் டிசம்பர் முதல் பள்ளி கல்லுரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply