shadow

திடீரென வெளியாகும் ஜெயம் ரவி திரைப்படம்

ஜெயம் ரவி நடித்த ‘அடங்கமறு’ திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் வெள்ளியன்று திடீரென ஜெயம் ரவி நடித்த படம் ஒன்று வெளியாகவுள்ளது.

வரும் வெள்ளியன்று வெளியாகும் மூன்று படங்களில் ஒன்று ‘கனா’ நாயகன் தர்ஷன் நடித்த ‘தும்பா. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளதாகவும், இந்த தகவலை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த படக்குழு தற்போது வெளியிட்டு ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மேலும் ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘கோமாலி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும், இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *