திடீரென மாயமான வெள்ளநீர்: இங்கிலாந்தில் ஆச்சர்யம்

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ள நீர் திடீரென ஏற்பட்ட நீர்சுழலால் மாயமாகி போனதை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்

இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் என்ற பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் புறநகர் பகுதியில் ஓடிய வெள்ளம் திடீரென பூமியில் ஏற்பட்ட பள்ளத்தினால் நீர்ச்சுழலாகி மொத்த நீரும் சில நிமிடங்களில் பூமிக்குக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

Leave a Reply