திடீரென போராட்டத்தில் குதிக்கும் குஷ்பு, சசிகலா புஷ்பா: என்ன காரணம்?

இந்து பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் திருமாவளவனை கண்டித்து நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா எம்பி ஆகியோர் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

திருமாவளவனின் தொகுதியான சிதம்பரத்தில் நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியிலேயே குஷ்பு தடுத்து நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

திருமாவளன் தொகுதியிலேயே பாஜகவினர் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீசார் கருதுவதால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply