திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் காணாமல் போன 21 வீடுகள்: அதிர்ச்சி தகவல்

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் காணாமல் போன 21 வீடுகள்: அதிர்ச்சி தகவல்

 சீனாவின் குய்சோ மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுய்செங் என்ற கிராமத்தில் 21 வீடுகள் முற்றிலும் புதைந்தது. இந்த வீடுகளில் சிக்கியவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். உயரமான மலை பகுதியிலிருந்து பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு வந்து குடியிருப்பு கட்டிடங்கள் மீது விழுந்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது

இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி, மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 22 பேரில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply