தாம்பரம் – நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில் குறித்த தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அக்டோபர் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி தாம்பரம் – நெல்லை இடையே அக்டோபர் 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. \\

அதேபொல் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புவதற்கு வசதிக்காக நாகர்கோவில் – தாம்பரம் இடையே அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் – திருச்சி இடையே அக்டோபர் 30ம் தேதியிலும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறப்பட்டுள்ளது.

Leave a Reply