தாத்தா ஆனார் சூர்யா பட இயக்குநர்: எஸ்எஸ் ராஜமவுலி வாழ்த்து

தாத்தா ஆனார் சூர்யா பட இயக்குநர்: எஸ்எஸ் ராஜமவுலி வாழ்த்து

சர்ச்சைக்குரிய இயக்குனர் என்று கூறப்படும் ராம்கோபால் வர்மா, சூரியா நடிப்பில் உருவான ’ரத்த சரித்திரம்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தெலுங்கு இந்தி உள்பட இந்திய திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம்கோபால் வர்மா தற்போது ஹைதராபாத்தில் பெண்டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்

இந்த நிலையில் ராம்கோபால் வர்மாவின் மகள் ரேவதி வர்மாவுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்கள் ராம்கோபால் வர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply