தாஜ்மஹால், மாமல்லபுரத்தை மூட அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகம் மூடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் திறக்கப்பட்டு இருந்தால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply